தென் கொரியா : ஓட்டல் அறையில் நடப்பவை வீடியோ மூலம் ஒளிபரப்பு

சியோல்

சியோல் நகரில் ஓட்டல்களின் அறைகளில் வீடியோ காமிரா பொருத்தப்பட்டு நடப்பவைகளை நேரடியாக ஒளிபரப்பப் பட்டுள்ளது.

தென் கொரியாவில் ஆபாச படங்கள் அதிகம் விற்கப்படுகின்றன. அவற்றில் பல அதில் உள்ளவர்களுக்கே தெரியாமல் ஸ்பை காம் எனப்படும் ஒளித்து வைக்கப்பட்ட வீடியோ காமிராக்களில் எடுக்கப்பட்ட படங்களாகும். இந்த வருடம் ஜனவ்ரி மாதம் இவ்வாறு உள்ளூர் வெப் சைட் ஒன்றில் இத்தகைய படங்களை வெளியிட்ட ஒருவர் இரண்டாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதை ஒட்டி சியோல் நகர காவல்துறையினர் விசரணை நடத்தினர். விசாரணையில் ஒருவர் கொரியாவின் பிரபலங்களின் ஆபாச வீடியோவை வெளியிட்டது கண்டு பிடிக்கபட்டது. அத்துடன் அவர் ஒரு பெண்ணை பணி அமர்த்தி அவர் பாலியல் உறவு கொள்ளும் போது வீடியோக்கள் எடுக்கப்பட்டதையும் ஒப்புக் கொண்டுள்ள்ளார்.

அத்துடன் கொரியாவில் இதை போன்ற பாலியல் உறவுகளை நேரடியாக காண்பிக்கும் இணைய தளங்கள் இயங்குவதையும் அந்த நபர் தெரிவித்துள்ளார். அது குறித்து மேலும்விசாரித்த போது கடந்த நவம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட அந்த இணைய தளத்தில் 4000 சந்தாதாரர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு சந்தாதாரரிடமும் $6000 சந்தா பெறப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த நேரடி ஒளிபரப்புக்காக சியோல் நகரில் உள்ள பல ஓட்டல் அறைகளில் காமிராக்கள் மறைத்து வைக்கப்பட்ட விவகாரம் வெளி வந்துள்ளது. ஓட்டல் அறைகளில் உள்ள சுவர் ஓவியங்களிலும், ஹேர் டிரையர் ஸ்டாண்டிலும் இந்த காமிராககள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இது போல சுமார் 1600 பேரின் அந்தரங்க உறவுகள் ஒளிபரப்பப் பட்டுள்ளன.

சியோல் நகர காவல்துறையினர் இந்த விவகரம் தொடர்பாக இணைய தளம்நடத்திய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு தென் கொரிய சட்டப்ப்டி ஐந்து வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளது.