மான்செஸ்டர்: இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், லிவர்பூல் அணி சாம்பியன் பட்டம் வெல்வது உறுதியாகியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ளூர் கிளப் அணிகள் மோதும் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. புள்ளிப்பட்டியலின் அடிப்படையில், மொத்தம் 86 புள்ளிகள் பெற்று லிவர்பூல் அணி முதலிடத்தில் உள்ளது. இந்த அணி மொத்தம் 31 போட்டிகளில் விளையாடியுள்ளது.

மான்செஸ்டர் அணி 63 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. இந்த அணி மொத்தம் 30 போட்டிகளில் ஆடியுள்ளது.

இந்நிலையில், செல்சி – மான்செஸ்டர் சிட்டி அணிகள் ஒரு லீக் போட்டியில் மோதின. கோப்பை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க வேண்டுமானால், இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த சிட்டி அணியோ, 1-2 என்ற கோல்கணக்கில் போட்டியை இழந்தது.

எனவே, லிவர்பூல் அணி முதலிடத்தை உறுதிசெய்து, 30 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் கோப்பை வெல்லும் வாய்ப்பைப் பெற்றது. இது அந்த அணிக்கான 19வது கோப்பையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 1989-90 சீசனில் கோப்பை வென்றிருந்தது அந்த அணி.