நாகர்கோவில்,

நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் பல்லி கிடந்தது தெரிய வந்தது. இதன் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும குறைந்த விலையில் உணவு வழங்கும்பொருட்டு அம்மா உணவங்களை தொடங்கினார். தொடக்கத்தில் இதற்கு பெரும் வரவேற்பு இருந்தது. ஆனால், அவர் மறைவுக்கு பின்னர், அம்மா உணவகத்தில் தரமான உணவுகள் வழங்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

நாகர்கோவில் அருகே உள்ள  ஆசாரிபள்ளம்  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஒரு பெண் தனது தாயாரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை மருத்துவமனை வளாகத்தில்  உள்ள அம்மா உணவகத்திற்கு சென்று காலை உணவான இட்லி சாம்பிர் வாங்கினார். அப்போது,  சாம்பாரில் பள்ளி ஒன்று இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதைக்கண்டதும் அவருக்கு வாந்தி ஏற்பட்டது.

இதைக்கண்ட பக்கத்தில் இட்லி சாம்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் சுகாதார துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிகழ்வு மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.