பாட்னா :

றைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானால் உருவாக்கப்பட்ட லோக்ஜனசக்தி, பீகார் தேர்தலில் இந்த முறை தனித்து போட்டியிட்டது.

லோக்ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வானுக்கும், முதல்-அமைசர் நிதீஷ்குமாருக்கும் இடையே ஏற்பட்ட உரசலே இதற்கு காரணம்.

லோக்ஜனசக்தி 167 இடங்களில் களம் இறங்கியது. இதில் பா.ஜ.க. போட்டியிட்ட ஐந்து இடங்களை தவிர மற்ற அனைத்து தொகுதிகளும் நிதீஷின் ஐக்கிய ஜனதா தளம் நின்ற இடங்கள் ஆகும்.

தான் ஜெயிக்க வேண்டும் என்பது சிராக்கின் எண்ணம் அல்ல. நிதீஷ்குமார் தோற்க வேண்டும் என்பது அவரது இலக்கு. அந்த இலக்கை சிராக் எட்டி விட்டார் என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன்.

இந்த தேர்தலில் லோக்ஜனசக்தி ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர்கள் சுமார் 30 பேர் தோல்வி அடைய, சிராக் கட்சி காரணமாக இருந்துள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் தோல்வி அடைந்த 30 தொகுதிகளில் லோக்ஜனசக்தி 10 ஆயிரம் ஓட்டுகள் முதல் 50 ஆயிரம் ஓட்டுகள் வரை வாங்கியுள்ளது.ஒரு உதாரணம்.

தினாரா தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. ஜெய் குமார் சிங் போட்டியிட்டார். அவரை எதிர்த்து லோக்ஜனசக்தி, ராஜேந்திர சிங் என்பவரை நிறுத்தியது. அவர் இந்த தேர்தலில் சுமார் 51 ஆயிரம் ஓட்டுகள் வாங்கியுள்ளார்.

ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் சுமார் 27 ஆயிரம் வாக்குகள் பெற்றார். ஆர்.ஜே.டி. வேட்பாளர் சுமார் 59 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார்.

“தனக்கு இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும்” என்ற லட்சியத்துடன் செயல்பட்ட சிராக், அந்த லட்சியத்தை அடைந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

– பா. பாரதி