அரசு பள்ளிகளில் எல்கேஜி வகுப்பு ஜனவரி மாதம் தொடங்க நடவடிக்கை: செங்கோட்டையன்

சென்னை:

அரசு பள்ளிகளில் எல்கேஜி வகுப்பு ஜனவரி மாதம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இன்று காஞ்சிபுரம் சென்ற அமைச்சர், அங்கு காமாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் சய்தார். அதைத்தொடர்ந்து, காஞ்சி இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரரை சந்தித்து  ஆசி பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில், முதல்வரும், துணைமுதல்வரும் இணைந்து பணியாற்றி, மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகத்தை நிர்வகித்து வருகின்றனர் என்றார்.

தமிழகம் முழுவதும் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 11 லட்சத்து 17 ஆயிரம் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தினப்டி சைக்கிள் வழங்கும் நிறுவனம், கர்நாடக, தமிழகம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் ஒரே நிறுவனம்தான்.  அதனால்தான் தமிழகத்தில் வழங்கப்பட்ட சைக்கிளில் கர்நாடகா சின்னம் பொறிக்கப்பட்டதில்  குழப்பம் ஏற்பட்டது. தற்போது அந்த குழப்பம் சரிசெய்யப்பட்டுவிட்டது என்று கூறினார்.

அரச பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான இலவச திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருவதாகவும்,   ஜனவரி மாதம் முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் அரசு பள்ளிகளில்  தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன்காரணமாக ஏழை மாணவர்களின் பெற்றோர்களின் ஆங்கில வழி கல்வி ஆசை நிறைவேறும் என்றார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிப்பதில் எந்த தடையும் இல்லை என்றும் அவர் கூறினார்.