டெல்லி: கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியானதால், வங்கிக்கடன் வட்டிகளை தள்ளுபடி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. உச்சநீதிமன்றமும் அதுகுறித்து மத்தியஅரசுக்கு அறிவுறுத்தியது.

இந்த நிலையில், ‘வங்கி கடன்களுக்கான ஆறு மாத வட்டியை ஒட்டு மொத்தமாக தள்ளுபடி செய்தால், வங்கிகளுக்கு ரூ.6 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்,’ என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் அறிவித்த நிலையில், வங்கிகளின் கடன் வட்டி, வசூலிக்க 6 மாதம் தடை விதிக்கப்பட்டது. ஆனால், வங்கிகள் வட்டிக்கு வட்டிப்போட்டு மொத்த கட்டும்பாடி பயனர்களை வலியுறுத்தி வந்தன. இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.  உச்ச நீதிமன்றத்தில் தற்போதும் நிலுவையில் உள்ளது.

‘இந்த வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து,  வங்கிகளில் கடன் வாங்கிய மக்களுக்கு தவணையை திருப்பி  செலுத்தாதவர்களுக்கு வங்கிகள் விதித்த வட்டிக்கு வட்டியை, ரூ.2 கோடி வரை கடன் பெற்றவர்களுக்கு மட்டுமே மத்திய அரசு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.‘

ஆனால், சிறுகுறு வியாபாரிகளுக்கு இந்த சலுகை கிடையாது என அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து  சிறுகுறு உற்பத்தியாளர்கள்  வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் மத்தியஅரசு புதிய அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அதில்,   ‘நாடு முழுவதும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அனைத்து துறைகளுக்கும் ஊக்கச் சலுகை திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. அதன்படி, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், ஓட்டல் உள்ளிட்ட 27 துறைகளுக்கு அவசர கடன் உதவி திட்டத்தின் கீழ் உத்தரவாதமில்லா கடன் வழங்க, ரூ.3 லட்சம் கோடி ஒதுக்க்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு மார்ச் முதல் ஆகஸ்டுவரையிலான 6 மாதங்களுக்கு,ரூ.2 கோடி வரையிலான அனைத்து கடன்களுக்கான வட்டிக்கு வட்டியை ஏற்பதாக தெரிவிக்கப்பட்டு, திட்டம் நடைமுறையில் உள்ளது.

இதே நேரத்தில் வட்டியும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என சில மனுதாரர்கள் தரப்பில் விசாரணையின் போது கோரிக்கை வைக்கப்படுகிறது. அதனை ஏற்க முடியாது. அதற்கான சாத்தியமும் கிடையாது.

அவ்வாறு முழுமையாக வடிட்டியை தள்ளுபடி செய்யப்படும் பட்சத்தில் வங்கிகளுக்கு ரூ.6 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்.  இதனால், வங்கிகளின் சொத்து மதிப்பு 50 சதவீதம் வரையில் குறைந்து அவற்றின் செயல்பாடு பெரிதும் பாதிக்கப்படும். இது நாடு முழுவதிலும் உள்ள வங்களில் டெபாசிட் செய்துள்ள மூத்த குடிமக்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.