ரிசர்வ் வங்கி அறிக்கைக்கு மாறாக செயல்படும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: திருப்பூர் ஆட்சியர் எச்சரிக்கை

திருப்பூர்:

ரிசர்வ் வங்கி அறிக்கைக்கு மாறாக செயல்படும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பாதிப்பால் மக்கள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறார்கள். இதனால் மார்ச் மாதத்தில் செலுத்தப்பட வேண்டிய கடன்களை செலுத்த மே 31 வரை அவகாசம் அளித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. அத்துடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் இந்த அவகாசத்தை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்து அண்மையில் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. கடன் இஎம்ஐ செலுத்த இந்த 6 மாத காலத்திற்கு காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி அறிக்கைக்கு மாறாக செயல்படும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.