டெல்லி:  கொரோனா பொதுமுடக்கம் காலத்தில்,  கடன்தாரர்களிடம் இருந்து வட்டிக்கு வட்டி வசூலித்ததை நவம்பர் 5ந் தேதிக்குள் திரும்பி வழங்க, வங்கிகள், நிதித்துறை நிறுவனங்களுக்கு    ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரமே  முடங்கிய நிலையில், வங்கிகள், நிதிநிறுவனங்களில் ஏற்கனவே வாங்கப்பட்ட வட்டிகள் செலுத்தவும் 6 மாதம் காலம் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால்,  வங்கிகளும் நிதிநிறுவனங்களும், நிறுத்தி வைக்கப்பட்ட வட்டிக்கு கூடுதலாக வட்டி வசூலித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் மத்தியஅரசை கடுமையாக சாடியது.

இதனைத் தொடர்ந்து, ரூ.2 கோடி வரையில் கடன் வாங்கியவர்களுக்கு கடந்த மார்ச் முதல் ஆக., மாதம்  வரையிலான 6 மாத காலத்துக்கு வட்டிக்கு வட்டி வசூலிப்பதை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துஅதை நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதுதொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய அரசு அக்டோபர் 23-ந் தேதி வெளியிடப்பட்டது.

இதையடுத்து, கடன்தாரர்கள் செலுத்திய கூடுதல் வட்டித்தொகையை அவர்களுக்கு நவம்பர் 5ந் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று,  அனைத்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் உத்தரவிட்டு உள்ளது.

முன்னதாக இதுதொடர்பான வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில்  ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அனைத்து தொடக்க அதாவது நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், அகில இந்திய நிதி நிறுவனங்கள் (வங்கிகள்), வங்கிகள் சாரா நிதி நிறுவனங்கள் (வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் உள்பட), இந்த திட்ட விதிகளின் கீழ், தேவையான நடவடிக்கைகளை  நவம்பர் 5ந் தேதி எடுக்க வேண்டும்.

குறிப்பிட்ட கடன் கணக்குகளில் மார்ச் 1ந் தேதி முதல் ஆகஸ்டு 31ந் தேதி வரையிலான6 மாத காலத்துக்கான கூட்டு வட்டி மற்றும் சாதாரண வட்டிக்கு இடையேயான வித்தியாசத்தை கருணைத்தொகையாக செலுத்துவதற்கு இந்த திட்டம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழிகாட்டும் நெறிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.