ஏரியில் HIV பாதிக்கப்பட்ட பெண்ணின் சடலம் இருந்ததால் தண்ணீரை வெளியேற்றிய கிராமம்

தர்வாத்:

கர்நாடகாவின் தர்வாத் மாவட்டத்தில் உள்ள நவல்குன்ட் தாலுகாவில் அமைந்துள்ள 32 ஏக்கர் ஏரியில் உள்ள மொத்த தண்ணீரையும் உள்ளூர் அதிகாரிகள் வெளியேற்றி உள்ளனர்.

கடந்த நவம்பர் 28ம் தேதி, அந்த ஏரியில் HIV பாதிக்கப்பட்ட பெண்ணின் சடலம் இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அங்குள்ள மொராப் கிராமத்திற்கு உள்ள ஒரே குடிநீர் ஆதாரம் இந்த ஏரிதான். HIV இருந்த பெண்ணின் உடல் அங்கிருந்து எடுக்கப்பட்டதால், அந்த கிராமத்தில் உள்ள சுமார் 150 பேர், தங்களுக்கும் HIV வந்துவிடும் என்ற அச்சத்தினால் அந்த ஏரியில் இருந்து தண்ணீர் அருந்த மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

“ஏரியில் இறந்து கிடந்த பெண்ணிற்கு HIV இருந்தது கிராம மக்களுக்கு தெரியும் என்பதால் அவர்கள் அதிலிருந்து தண்ணீர் அருந்த மறுத்துவிட்டனர். அதனால், அங்கிருந்த தண்ணீரை வெளியேற்றி, மலப்பிரபா அணையில் இருந்து சுத்தமான தண்ணீரை நிரம்புமாறு வலியுறுத்தினர். இந்த முடிவினை கிராம பஞ்சாயத்தும் ஒப்புக் கொண்டது,” என்று நவல்குன்ட் தாலுக்கின் தாசில்தார் நவீன் ஹூல்லூர் தெரிவித்தார்.