சென்னை:
மிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பதவி காலம் இன்றுடன் முடிகிறது.
இன்று அதற்கான அரசு ஆணை வெளியானது. நாளை முதல் தனி அதிகாரிகள், உள்ளாட்சி நிர்வாகங்களின் பொறுப்புகளை கவனிப்பார்கள்.
tn-logo
திமுக தொடர்ந்த வழக்கையடுத்து உள்ளாட்சி தேர்தலை உயர்நீதி மன்றம் ரத்து செய்தது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் காரணமாக உள்ளாட்சி தேர்தல் தள்ளிப் போகும் வாய்ப்பு ஏற்பட்டது.
ஆனால் தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் இன்றுடன் முடிவடைவதால், நாளை முதல் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. அதையடுத்து, தனி அதிகாரிகள் நியமனம் தொடர்பான அரசாணை இன்று வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 12,524 ஊராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன. இதில், 1,18,974 ஊரக உள்ளாட்சி மற்றும் 12,820 நகர்புற உள்ளாட்சி பதவிகள் என மொத்தம் 1,31,794 பதவிகள் உள்ளன.
இந்த பதவிகளுக்கு கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டு உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்று கொண்டனர். அவர்களின் ஐந்தாண்டு பதவி காலம் இன்றுடன் முடிகிறது.
இதைதொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிக்க ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் ஊராட்சி மற்றும் நகராட்சி சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அவசர சட்டம் பிறப்பித்தார்.
இந்த அவசர சட்டம் கடந்த 17ம் தேதியிட்ட தமிழக அரசிதழில் வெளியிடப் பட்டது
இந்தநிலையில், மக்கள் பிரநிதிகளின் பதவி காலம் இன்றுடன் முடிவடைவதையொட்டி, தனி அதிகாரிகள் நியமனம் தொடர்பான அரசின் அரசாணை இன்று  வெளியானது.
இவ்வாறு, நியமிக்கப்படும் தனி அதிகாரிகள் நாளை முதல் உள்ளாட்சி நிர்வாக பொறுப்பை ஏற்க உள்ளனர்.
இதன்படி, சென்னை, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட 12 மாநகராட்சிகளுக்கு அந்தந்த மாநகராட்சி கமிஷனர், 124 நகராட்சிகளும் அந்தந்த நகராட்சி கமிஷனர், 528 பேரூராட்சிகள் செயல் அலுவலர் (இஓ), 388 ஊராட்சி ஒன்றியங்கள் வட்டார வளர்ச்சி அலுவலர், 31 மாவட்ட ஊராட்சிகள் அந்தந்த மாவட்ட ஊராட்சி செயலர், 12,524 கிராம ஊராட்சிகள் அரசால் நியமிக்கப்படும் திட்ட அலுவலர்கள் ஆகியோர் நிர்வகிப்பார்கள்.
இவ்வாறு, தனி அதிகாரி நியமிக்கப்பட்ட பிறகு நாளையில் இருந்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நடைபெறும் பணிகள் மற்றும் வளர்ச்சி  திட்டங்கள் அனைத்தும் அரசு அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் நடைபெறும்.
20 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி அமைப்புகள் தனி அதிகாரிகளின் கீழ் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
go-local-elections