உள்ளாட்சி தேர்தல்: திருவண்ணாமலையில் 47 ஊராட்சிமன்ற தலைவர்கள் போட்டியின்றி தேர்வு

திருவண்ணாமலை:

மிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில், 47 ஊராட்சிமன்ற தலைவர்கள் பதவிகளுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் வரும், டிசம்பர் 27ந்தேதி மற்றும் 30ந்தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் முடிந்து, அவேட்புமனு பரிசீலனை மற்றும் வேட்பு மனு வாபஸ் வாங்கும் தேதியும் முடிவடைந்து இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 ஊராட்சி பஞ்சாயத்துக்கள் உள்ளன. இதில் 47 பஞ்சாயத்துக் களில் ஊராட்சி மன்ற தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் அலுவலர் தெரிவித்து உள்ளார். இவர்கள் பொதுவாக திமுக, அதிமுக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.இவர்களுடன்  சிபிஎம் கட்சியை சேர்ந்தவர்கள் 5 பேரும், மதிமுகவை சேர்ந்த ஒருவரும்,  போட்டியின்றி ஊராட்சி மன்ற தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

அதேபோல் ஒன்றிய குழு கவுன்சிலர்களில் மூன்று பேர் போட்டியின்று தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.