உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை மே 31ம் தேதிக்குள் வெளியிடப்படும்: தமிழக தேர்தல்ஆணையர் நீதிமன்றத்தில் தகவல்

சென்னை:

மிழகத்தில்  உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பு மே 31ந்தேதிக்குள் வெளி யிடப்படும் என்றுதமிழக தேர்தல்ஆணையம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக  உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத தால் மக்கள் நலப்பணிகள் பாதிப்படைந்து வருகின்றன. இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் கடந்த ஆண்டு  உத்தரவிட்டிருந்தது. அது செயல்படுத்தப்படாததால், நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில்,  நாடாளுமன்ற தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதால் அதன்பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு மார்ச் 31ந்தேதிக்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால்,  நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக  இருப்பதால், அதற்கான பணிகள் முடிவடைந்த பிறகே உள்ளாட்சி தேர்தல் குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி