ஏப்ரலுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாது! தேர்தல் ஆணையம்

சென்னை,

மிழக உள்ளாட்சி தேர்தலை மே மாதம் 14ந்தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ஆனால், நடத்த முடியாது என்று தமிழக தேர்தல் ஆணையம் பதில் அளித்து உள்ளது.

தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அடோபர் மாதம்  24-ந் தேதியுடன் முடி வடைந்தது.  அதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 17, 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால், இடஒதுக்கீடு சரிவர பின்பற்றவில்லை என்று திமுக வழக்கு தொடர்ந்ததையடுத்து உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

பின்னர் தேர்தல் குறித்த விசாரணையின்போது பல்வேறு காரணங்களை கூறி, அவகாசம் தேவை உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசும், தமிழக தேர்தல் ஆணையமும் தாமதப்படுத்தி வந்தன.

அதைத்தொடர்ந்து பிப்ரவரி 21ந்தேதி ஐகோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதில்,  தேர்தல் நடவடிக்கைகளை ஏப்ரல் 15ந் தேதிக்குள் தொடங்கி மே 14க்குள்  இரண்டு கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக தேர்தல் ஆணையத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,  தமிழகத்தில் ஏப்ரல் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என்று மாநில தேர்தல் ஆணையம்  ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

ஆனால் மனுதாரர் ஏப்ரல் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரியிருந்தார். அதற்கு பதில் மனு தாக்கல் செய்ய தமிழக தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 3ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.