உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதி மன்றத்தில் திமுக கேவியட் மனு!

டில்லி:

மிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக யாராவது மேல்முறையீடு செய்தால் அந்த வழக்கில் தங்களையும் சேர்க்க வேண்டும் என்று திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் வரும் நவம்பர் 17 -ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்றும், அதற்கான அறிவிப்பு இந்த மாதம் 18ந்தேதிக்குள் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தங்கள் தரப்பை கேட்காமல், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில்  உச்சநீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என கூறியுள்ளது.