உள்ளாட்சி தேர்தல்: திமுக தொண்டர்களுக்கு அன்பழகன் வேண்டுகோள்

சென்னை:

ள்ளாட்சி அமைப்பு குறித்து திமுகவினருக்கு, பொதுச்செயலாளர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உள்ளாட்சி அமைப்புக்கான இட ஒதுக்கீடு தொகுதி பட்டியலை சரிபார்த்து தெரிவிக்குமாறு  அறிவுறுத்தி உள்ளார்.

அன்பழகன்

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் ஓரிரு நாளில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே உச்சநீதி மன்றம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தர விட்டு உள்ளது. மேலும், உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருப்பதால், உள்ள மத்தியஅரசும் உள்ளாட்சிக்கான நிதியை தர மறுத்து வருகிறது.

இந்த நிலையில், திமுகவினருக்கு, திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதில்,  ஒவ்வொரு உள்ளாட்சி தொகுதிகளிலும் மறுவரையறை செய்யப்பட்டு அதன்படி, இட ஒதுக்கீடு, சுழற்சி முறை செய்யப் பட்ட பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு அச்சகத்தில் இந்த புத்தகத்தை வாங்கி, அந்தந்த மாவட்டச் செயலாளர் களும், பொறுப்பாளர்களும் வார்டு, ஊராட்சி, ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி வாரியாக ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாற்றம் இருந்தால் அந்த விவரங்களை இம்மாத இறுதிக்குள், தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டுகிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.