சென்னை:

ரக உள்ளாட்சி பகுதிகளில் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் இன்று தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.  இதில், ஏராளமான குளறுபடிகள் நடைபெற்று வருகின்றன.

பல இடங்களில் திமுக, அதிமுக இடையே போட்டி நிலவி வரும் நிலையில், ஒருவருக்கொருவர் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவங்களும் அரங்கேறி உள்ளன.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்தில், தேர்வு செய்வதற்கு உரிய உறுப்பினர்கள் வராததால்,  தலைவர் தேர்தல் தள்ளி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துஉள்ளார்.

நாமக்கல் மாவட்டம்  பரமத்திவேலூர் ஒன்றிய தலைவர் தேர்தலை அதிமுக உறுப்பினர்கள் புறக்கணிப்பு செய்துள்ளனர்.  திமுக உறுப்பினர்கள் 4 பேர் வந்த நிலையில் அதிமுக உறுப்பினர்கள் 4 பேர் வராததால்,  ஒன்றிய தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உருவாகி உள்ளது.

விருதுநகர் – நரிக்குடி ஊராட்சி ஒன்றிய தேர்தலின்போது மோதலை தடுக்க முயன்ற டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

திருத்தணி, திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டில் எந்த உறுப்பினர்களும் மறைமுகத் தேர்தலில் பங்கேற்காததால் ஒன்றிய தலைவர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம் – போகலூர் ஒன்றிய தலைவர் தேர்தலின்போது, திமுக வேட்பாளர் வாக்கு பெட்டியில் மை ஊற்றியதால் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டு  உள்ளது.

திருவாரூரில் முழுமையாக நிறைவடைந்தது மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் அலுவலர் மயக்கம்  அடைந்ததைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. அவரை  ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். முடிவை அறிவித்து செல்லுமாறு மறியல் போராட்டம் நடத்தினர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில்  கட்சியினருக்கு இடையே மோதல். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது. இதனால் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.  அதிமுக வெற்றியை அறிவிக்க மறுப்பதாக கூறப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு தலைவராக அதிமுகவின் ஜெயலட்சுமி தேர்வு  திமுக கூட்டணி அதிக உறுப்பினர்களை வைத்திருந்த நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுவரை நடைபெற்றுள்ள மாவட்l  ஊராட்சித் தலைவருக்கான தேர்தலில் அதிமுக 14 இடங்களையும், திமுக 12 இடங்களையும் கைப்பற்றி உள்ளது.

ஒன்றியத் தலைவருக்கான மறைமுகத் தேர்தலில், அதிமுக 144 இடங்களையும், திமுக 128 இடங்களையும் கைப்பற்றி உள்ளது.