சென்னை:

மிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,  இட ஒதுக்கீட்டின் படி சென்னை மாநகராட்சியின் வார்டுகள் விவரம் வெளியாகி உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான இடஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான இட ஒதுக்கீடு விவரங்கள் குறித்து கடந்த ஜூன் மாதம் தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி,  உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடும், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களின் மக்கள் தொகையின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்த ஒதுக்கீடானது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மாற்றப்பட்ட வேண்டும் என்றும் அறிவித்திருந்தது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 14 மாநகராட்சிகள், 122 நகராட்சிகள், பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பதவிகளுக்கான இடஒதுக்கீட்டினை அரசாணையாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்த பதவிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் (பொது), தாழ்த்தப்பட்டவர்கள் (பெண்கள்), பழங்குடியினர் (பொது), பழங்குடியினர் (பெண்கள்), பெண்கள், பொது என்ற ஆறு வகையாக பிரித்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதன்படி எந்ததெந்த வார்டுகளில் யார் யார் போட்டியிலாம் என்பது தொடர்பாக உத்தரவையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 14 மாநகராட்சிகள், 122 நகராட்சிகள், பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பதவிகள் இடஒதுக்கீடு அடிப்படையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த பதவிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் (பொது), தாழ்த்தப்பட்டவர்கள் (பெண்கள்), பழங்குடியினர் (பொது), பழங்குடியினர் (பெண்கள்), பெண்கள், பொது என்ற ஆறு வகையாக பிரித்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதன்படி எந்ததெந்த வார்டுகளில் யார் யார் போட்டியிலாம் என்பது தொடர்பாக உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில்உள்ள 200 வார்டுகளில் இடஒதுக்கீடு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் பொது பிரிவுக்கு 79 வார்டுகளும், பொதுப் பிரிவு பெண்களுக்கு 89 வார்டுகளும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 16 வார்டுகளும், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு 16 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மே 24-ந் தேதியிட்ட தமிழக அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுப் பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 89 வார்டுகள் விவரம் :-

வார்டு 2, 8, 9, 11, 12, 13, 14, 15, 19, 20, 25, 26, 29, 30, 33, 34, 39, 42, 43, 44, 48, 49, 50, 51, 58, 61, 67, 68, 69, 75, 76, 79, 81, 83, 87, 88, 91, 93, 95, 96, 97, 98, 100, 101, 102, 103, 113, 118, 119, 122, 123, 125, 126, 128, 131, 132, 134, 136, 139, 140, 146, 147, 149, 150, 151, 152, 153, 158, 160, 161, 164, 167, 170, 171, 173, 174, 175, 179, 180, 183, 185, 186, 187, 188, 191, 192, 193, 194, 197.

தாழ்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட 16 வார்டுகள் விவரம்:-

வார்டு 3, 16, 18, 21, 22, 24, 31, 45, 62, 72, 73, 99, 108, 117, 144, 200.

தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட 16 வார்டுகள் விவரம்:-

17, 28, 46, 47, 52, 53, 59, 70, 74, 77, 85, 111, 120, 135, 159, 196.

மீதமுள்ள 79 வார்டுகள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டவையாகும்.