உள்ளாட்சி தேர்தல்: 121 நகராட்சிகளுக்கான இட ஒதுக்கீட்டு பட்டியல் அரசிதழில் வெளியீடு

சென்னை:

மிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்க உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 121நகராட்சி களுக்குமான இட ஒதுக்கீட்டு பட்டியலை தமிழகஅரசு,  அரசிதழில் வெளியிட்‘டுள்ளது.

தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு வரும் 27 மற்றும் 30ந்தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் நகராட்சிகளுக்கான இடஒதுக்கீடு விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி கடலூர் நகராட்சி பழங்குடி இன பெண்களுக்காக வும், ராணிப்பேட்டை, சீர்காழி,திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட 9 நகராட்சிகள் பட்டியல் இன பெண்களுக்காகவும் மற்றும் நெல்லிக்குப்பம்,அரக்கோணம்,மறைமலைநகர் உள்ளிட்ட 8 நகராட்சிகள் பட்டியல் இனத்தவர்களுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றியத்தலைவர் பதவிகளுக்கு ஏற்கனவே இட ஒதுக்கீடு அறிவித்து 2016ம் ஆண்டு தமிழக அரசு அரசிதழ் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.