உள்ளாட்சி தேர்தல் இன்று அறிவிப்பு? செய்தியாளர்கள் கூட்டத்துக்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு

சென்னை:

மிழகத்தில்உள்ளாட்சி தேர்தல் இந்த மாத இறுதியில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. செய்தியாளர்கள் கூட்டத்துக்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அழைப்பில்,  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கூட்டரங்கில் இன்று 2.12.2019 காலை 10.00 மணிக்கு பத்திரிகையாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதால் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.