சென்னை:

மிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அரையாண்டு தேர்வு விடுமுறையில் நடத்த வாயப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, இட ஒதுக்கீடு, வார்டு மறுவரையரை செய்தல் போன்ற வழக்குகளினால் ரத்தானது. இதனையடுத்து உள்ளாட்சி துறை தேர்தலை காலதாமதமின்றி நடத்த அனைத்து அரசியல் கட்சிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், உச்சநீதி மன்றம் இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழகஅரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சென்னையில் நேற்று மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமியின் தலைமையில் மாவட்ட ஆட்சியாளர்களுடன் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், எந்நேரமும் தேர்தல் தேதி வெளியாகும் என்பதால் தேர்தல் குறித்த ஏற்பாடுகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடந்து முடிந்தவுடன் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களின் இறுதி பட்டியலை அறிவித்த கையோடு, அவர்களின் பயிற்சி முகாம்களை முடிக்க தேர்தல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து மாவட்டம் வாரியாக பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர்கள் விவரங்களை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது.

அதன்விவரம்

பஞ்சாயத்து தலைவர் & கவுன்சிலர்-1-2