சேலம்:

மிழக ஊரகப்பகுதிகளுக்கான முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில்,  சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ளா வாக்குச்சாவடியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது குடும்பத்தினருடன் சென்று வரிசையில் நின்று வாக்களித்தார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையத்தை சேர்ந்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று உள்ளாட்சித் தேர்தலையொட்டி, அங்குள்ள  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கிய நிலையில், மதியம் சுமார் 12.35 மணியளவில் குடும்பத்தினருடன் நடந்து வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுமார் 15 நிமிடங்கள் வரிசையில் காத்திருந்தார். பின்னர் முதலமைச்சரும், அவரது மனைவி, மகன், மருமகள் உள்ளிட்ட குடும்பத்தினரும் வாக்களித்தனர்.

இதை முன்னிட்டு, கோவை ஐ.ஜி. பெரியய்யா தலைமையில், அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.