அவசர கோலத்தில் தேர்தல் அறிவிப்பு: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு!

சென்னை:

மிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதியை, தமிழக தேர்தல் ஆணையம் அவசர கோலத்தில் அறிவித்து உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டி உள்ளார்.

tamilnadu

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர்,  தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளதாகவும் அதற்காக 61 மாவட்டத்தில்  பொறுப்பாளர்களை நியமித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் உள்ளாட்சி தேர்தல் தேதியை தமிழகதேர்தல் ஆணையம் அவசர கோலத்தில் அறிவித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஆளும் அதிமுக அரசு ஜனநாயக முறைப்படி மேயரை தேர்ந்தெடுக்க விடாமலும் மற்ற கட்சிகளுக்கு வாய்ப்பளிக்காமலும் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் இஸ்லாமியர்களை திட்டவும் வேண்டாம் பாராட்டவும் வேண்டாம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டம் தெரிவித்த திருநாவுக்கரசர்,  இது பாஜகவின் மதவாத அணுகுமுறையை காட்டுவதாக கூறினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

You may have missed