புது தில்லி:
மிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்று திமுகவின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.
தமிழகத்தில் வரும் அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்த, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
supreme
ஆனால், அது சாத்தியமில்லை என்றும், அவ்வளவு மின்னணு எந்திரங்கள் தேர்தல் கமிஷனிடம் இல்லை என்றும் தேர்தல் கமிஷன் சார்பாக கூறப்பட்டதை அடுத்து திமுகவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
அதையடுத்து திமுக சார்பில் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும் வரை, தேர்தலை நடத்த தடை விதிக்க கோரினர்.
ஆனால் உச்ச நீதி மன்றம் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது. மேலும் தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிடவும் மறுத்து விட்டது. மேலும் இதுகுறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.