ஞ்சாவூர்

ஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்தில் பிப்ரவரி மதம் 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோவில் என அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவிலுக்கு பெருவுடையார் கோவில் எனவும் பெயர் உண்டு. இந்த கோவில் குடமுழுக்கு விழா 23  ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி நடத்தத் திட்டம் இடப்பட்டுள்ளது.   இக்கோவிலில் இதற்காக ஓராண்டுக்கும் மேலாகத் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த குடமுழுக்கு விழாவைச் சிறப்பாக நடத்தத் தமிழக அரசின் முதன்மைச் செயலர் சண்முகம் தலைமையில் 21 பேர் கொண்ட குழு ஒன்றைத் தமிழக அரசு அமைத்துள்ளது.   இந்தக் குழுவில் நிதி,  சுற்றுலா, உள்ளிட்ட பல செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளனர்.   இந்த அதிகாரிகள் பெரிய கோவில் குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகளைக் கவனித்து வருகின்றனர்.

இந்த குடமுழுக்கு விழாவைத் தமிழ் வழியில் நடத்த வேண்டும் என வழக்கு நடந்து வருகிறது.  அத்துடன் ஆகம வழியில் நடத்த வேண்டும் என மற்றொரு  பிரிவினர் வாதாடி வருகின்றனர்.   இதையொட்டி தமிழக அரசுக்குப் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தஞ்சை மாவட்டத்தில் குடமுழுக்கு விழாவுக்காக வரும் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அத்துடன் அதற்குப் பதிலாக பிப்ரவரி 22 ஆம் தேதி வேலை நாளாகச் செயல்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.