காரைக்குடி:

திமுகவுக்கு மக்கள் வாக்காளிக்காததாலேயே, ஆத்திரத்தில் வாக்குப்பெட்டிக்கு அதிமுகவினர் தீ வைக்கிறார் கள், என்று தமிழக சட்டமன்ற காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் கே.ஆர்.இராமசாமி குற்றம் சாட்டி உள்ளார்.

தமிழகத்தில்  ஊரக உள்ளாட்சி தேர்தல் 2-ம் கட்ட வாக்குபதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,  தமிழக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற குழு தலைவரும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ வுமான  கே.ஆர்.ராமசாமி கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கப்பலூர் தொடக்கப்பள்ளியில் வாக்குசாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசியவர், உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக சின்னங்கள் ஒதுக்குவது, வாக்குச்சாவடி எண்களை மாற்று போன்ற குளறுபடிகளை திட்டமிட்டு நடைபெற்று வருகிறது என்று குற்றம் சாட்டியவர்,  இந்த தேர்தலை ஒரு நாகரிகமான தேர்தலாக நான் கருதவில்லை என்றும், அ.தி.மு.கவிற்கு வாக்களிக்கவில்லை என்றால், வாக்குப்பெட்டிகளுக்கு தீ வைத்து கொளுத்துகின்றனர். அவர்களை எதிர்க்கும் மக்களை வாக்களிக்கவிடாமல் தடுக்கின்றர் என்று குற்றம் சாட்டினார்.

அதிமுகவினர், தங்களிடம் இருக்கும் பணபலத்தை வைத்து  உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றலாம் என்று நம்புகின்றனர், ஆனால், யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்று மக்களுக்கு தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.