ஜூலை 31 ஆம் தேதி வரை மேற்கு வங்கத்தில் ஊரடங்கு நீட்டிப்பு

கொல்கத்தா

ரும் ஜூலை 31 ஆம் தேதி வரை மேற்கு வங்கத்தில் ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த நாடெங்கும் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.   ஆயினும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் ஊரடங்கு மேலும் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.   தற்போதைய நீட்டிப்பில் பல இடங்களில் போக்குவரத்து உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளன.

மேற்கு வங்கத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டொர் எண்ணிக்கை 15173 ஆகி இதில் 591 பேர் மரணம் அடைந்துள்ளனர்.   இங்கு இதுவரை 9702 பேர் குணமடைந்து தற்போது 4880 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் அகில இந்திய அளவில் கொரோனா தாக்கத்தில் மேற்கு வங்கம் 7 ஆம் இடத்தில் உள்ளது.   இம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தினார்.

முதல்வர் மம்தா பானர்ஜியிடம் அனைத்துக் கட்சியினரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.  அதன் அடிப்படையில் மேற்கு வங்கத்தில் வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்க ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மம்தா அறிவித்துள்ளார்.   இந்த ஊரடங்கில் ஏற்கனவே அனுமதித்துள்ள உணவகங்கள் மற்றும் நிறுவனங்களை மட்டும் தொடர்ந்து நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.