ஜூலை 6 முதல் காணொலி காட்சி மூலம் முழுமையாக இயங்கும்: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை:

ஜூலை 6 முதல் காணொலி காட்சி மூலம் முழுமையாக இயங்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டு நீதிபதிகள், அவசர வழக்குகளை மட்டும் விசாரித்து வந்தது.  இந்த நிலையில், ஜூலை 6 முதல் காணொலி மூலம், புதிய மற்றும் நிலுவை வழக்குகளை விசாரிக்க உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் செயல்பாடு குறித்து தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் நடைபெற்ற, அனைத்து நீதிபதிகள் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.