காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கக் காலதாமதமான ஊரடங்கு.. அதிர்ச்சி  தகவல்கள்…

New Delhi, May 7 (ANI): Madhya Pradesh Chief Minister Kamal Nath addresses a press conferance at his residence in Bhopal on Tuesday. (ANI Photo)

மத்தியப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கவே, இந்தியாவில் காலதாமதமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதாகத் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த மாநில முன்னாள் முதல் –அமைச்சர் கமல்நாத், நேற்று செய்தியாளர்களிடம் இந்த குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியின் சாராம்சம்:

‘’  பிப்ரவரி மாதத்திலேயே இந்தியாவில் கொரோனா பரவும் ஆபத்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அப்போதே ஊரடங்கை அமல் படுத்தி இருக்க வேண்டும். ஆனால் மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசைக் கவிழ்ப்பதில் தான் மத்திய அரசு ஆர்வம் காட்டியது.

கொரோனாவை தடுப்பதில் அக்கறை காட்டவில்லை.
கொரோனா பரவ ஆரம்பித்த நேரத்தில் –

எங்கள் (காங்கிரஸ்) எம்.எல்.ஏ.க்களை இழுத்து பெங்களூருவில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தீர்கள்.

மார்ச் மாதம் 23 ஆம் தேதி பா.ஜ.க.வின் சிவராஜ் சிங் சவுகான், மத்தியப் பிரதேச முதல்-அமைச்சராகப் பதவி ஏற்கிறார்.

அதற்கு மறுநாள், (24 ஆம் தேதி) ஊரடங்கை அறிவிக்கிறார், பிரதமர் மோடி.

எங்கள் மாநிலத்தில் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க வேண்டும் என்பதற்காகவே ஊரடங்கு தாமதம் செய்யப்பட்டது.

இந்தியாவில் பெரிய அளவில் கொரோனா  பரவ இதுவே காரணம்.

மத்தியப் பிரதேசத்தில் என்ன நடக்கிறது?

முதல் –அமைச்சர் மட்டுமே இருக்கிறார்.

வேறு அமைச்சர்கள் யாரும் இல்லை.

முதன்மை சுகாதார செயலாளர் உள்ளிட்ட 44 சுகாதார அலுவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நோயைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?”

என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார், கமல்நாத்.

– ஏழுமலை வெங்கடேசன்