டெல்லி :

மே மாதம் 3 ம் தேதியுடன் முடிவதாக இருந்த ஊரடங்கு 2.0 வை மேலும் இரண்டு வாரத்திற்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மார்ச் 24 முதல் முறையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது முறையாக ஊரடங்கை நீட்டித்து இன்று உத்தரவிட்ட நிலையில் சில தளர்வுகளையும் உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
இந்த தளர்வில் முக்கிய பரிந்துரையாக பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் மதுக்கடைகளை மீண்டும் திறக்கலாம் என்று கூறியுள்ளது.
பார்கள் இல்லாத மதுக்கடைகளை மட்டும் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூட்டம் சேராமல், ஒரு நபருக்கு ஒரு நபர் 6 அடி இடைவெளியில் நின்று வாங்கிச்செல்லவேண்டும்.
மேலும், இதுபோன்ற நிபந்தனைகளுடன் மதுக்கடைகளை திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று அந்த பரிந்துரையில் கூறியுள்ளது.