லாக்டவுன்5.0: வழிப்பாட்டு தலங்கள் திறக்க தடை நீட்டிப்பு… பெரிய கடைகள் திறக்க அனுமதி…

சென்னை:

மிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30ந்தேதி வரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.  அதன்படி, வழிப்பாட்டு தலங்கள் திறக்க தடை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், வணிக வளாகங்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. ஆனால்,  பெரிய கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் 4-வது கட்ட பொதுமுடக்கம் இன்றுடன் முடிவடைவதைத் தொடர்ந்து, 5வது கட்ட ஊரடங்கு  கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் மட்டும் ஜூன் 30ந்தேதி நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது.   மேலும் 8-ந்தேதியில் இருந்து வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள், மால்களை திறக்க அனுமதி அளித்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஜூன் 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை தடைகள் அப்படியே நீடிக்கும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் 20% பணியாளர்கள் அதிகபட்சம் 40 பேருடன் இயங்கலாம் 50% ஊழியர்களுடன் அனைத்து தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி.

தமிழகத்தில் ஜூன் 1 முதல் 7ஆம் தேதி வரை காய்கறிக்கடைகள், உணவகங்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை இயங்கலாம்.

ஜூன் 8 முதல் தேநீர் கடைகள், உணவகங்களில் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை திறக்க தடை நீட்டிப்பு

வணிக வளாகங்கள் தவிர பிற பெரிய கடைகள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம்.  குளிர்சாதன வசதியின்றி 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

மறுஉத்தரவு வரும்வரை வழிபாட்டுத் தலங்களை திறக்க தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மதவழிப்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறவும் தடை தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு உள்பட சுற்றுலா தலங்கள் செல்ல தடை , ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடர்கிறது,  கொரோனா பணியில் உள்ளவர்களுக்கு தடையில் இருந்து விலக்கு.

நாளை முதல் சென்னை காவல் எல்லை நீங்கலாக பிற மாவட்டங்களில் பொது போக்குவரத்து தொடக்குகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது,