லாக்டவுன்: தமிழக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் அதிகாரிகள் இன்று அவசர ஆலோசனை!

சென்னை: தமிழகத்தில் இரவு மற்றும் ஞாயிறு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக  தமிழக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் அதிகாரிகள் இன்று அவசர ஆலோசனை நடத்துகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேடை நடைபெற்று முடிந்த நிலையில், மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கிடையில்,  கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து, 20 ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு காரணமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது கேள்விக்குறியானது. ஆனால், வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், அன்றைய தினம் ஊரடங்கு கிடையாது என தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு தெரிவித்தார்.

திடீர் அறிவிப்பால் வாக்கு எண்ணிக்கை நடைபெறுமா? மே இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய தினமும் ஊரடங்கு அமல் படுத்தப்படுமா? போன்ற என்று கேள்விகள் எழுந்தன. ஆனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே இரண்டாம் தேதி முழு உரடங்கு உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகள் பொருந்தாது என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்தார்.

இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் இன்று தலைமைச்செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தவுள்ளார். ஆலோசனை கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மேசைகளை குறைப்பது குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்கவுள்ளார்.
அதன்படி கட்சிகளுடனான ஆலோசனைக்கு பிறகு மேசைகள் குறைப்பது குறித்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என கூறப்படுகிறது.