கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: மத்திய பிரதேசத்தில் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு

போபால்: மத்திய பிரதேசத்தில் ஜூன் 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மே 31 வரை லாக்டவுன் 4 முறை நீட்டிக்கப்பட்து. இப்போது 5வது முறையாக நாடு முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு அதிகாரப்பூர்வமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு ஜூன் 30 வரை தொடரும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு ஜூன் 15ம் தேதி வரை மத்திய பிரதேசம் மாநிலத்தில் நீட்டிக்கப்படுகிறது என்று அம்மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் மத்திய பிரதேசம் மாநிலத்தின் இந்தூர் நகரமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.