நாடு முழுவதும் 5ம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி:

நாடு முழுவதும் 5ம் கட்ட ஊரடங்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பிரதமர் மோடி மார்ச் 24ம் தேதி ஊரடங்கை அறிவித்தார். பின்னர் 2ம் கட்டம், 3ம் கட்டம், 4ம் கட்டம் என ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

ஆனாலும் பல மாநிலங்களில் பாதிப்பு மட்டும் குறையவில்லை. 4ம் கட்ட ஊரடங்கும் ஞாயிற்றுக் கிழமையோடு முடிவுக்கு வருகிறது. எனவே  அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

இதேபோல், தமிழக பாதிப்பு நிலவரம் குறித்து கடந்த 26ம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

இந் நிலையில் நாடு முழுவதும் 5ம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதி தவிர பிற பகுதிகளில் ஒரு மாதத்திற்கான வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டு தலங்கள், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் ஜூன் 8ம் தேதிக்குப் பிறகு திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது.

பள்ளி – கல்லூரிகளைத் திறப்பது குறித்து, அந்தந்த மாநில அரசுகளே ஜூலை மாதம் இறுதி முடிவெடுக்கலாம்.

முதியோர், கர்ப்பிணிகள், 10 வயதிற்கு உட்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் உள்ளிட்ட பல வழிகாட்டுதல்களை உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

வழிகாட்டுதல்கள் விவரம்: