மேற்குவங்கத்தைத் தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்திலும் ஊரடங்கு ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு..

ராஞ்சி:

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜார்கண்ட் மாநிலத்தில் ஜூலை 31ந்தேதி வரை  ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே மேற்கு வங்கத்தில்  ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜார்கண்ட் மாநில அரசும் நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது.

மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 2290 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  1643 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 12 பேர் பலியாகி உள்ளனர்.  மீதமுள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில், நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஜூலை 31ந்தேதி ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

You may have missed