மகாராஷ்டிராவில் உச்சத்தில் இருக்கும் கொரோனா: ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதி தீவிரமடைந்து வருகிறது. வைரஸ்  காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அதற்கான தடுப்பு நடவடிக்கைகளிலும் அந்தந்த மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக, மகாராஷ்டிராவில் கொரோனா தாக்கம் உச்சத்தில் இருக்கிறது.  நாட்டிலேயே இந்த மாநிலத்தில் தான் வைரஸ் பாதிப்பும், உயிரிழப்புகளும்  அதிகம்.

அம்மாநிலத்தில் அமலில் உள்ள ஊரடங்கு நாளையுடன் முடிகிறது. இந் நிலையில், மகாராஷ்டிராவில் ஊரடங்கை ஜூலை 31 வரை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களும் ஊரடங்கை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளன.