ஊரடங்கு மேலும் நீட்டிப்பு? 29ம் தேதி  மீண்டும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர்…

--

சென்னை:

மிழகத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து திரும்பும் தொழிலாளர்களால்  கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால், தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்வரும் 29ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மீண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் தமிழகஅரசு,  கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக  நேற்று  மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தியது.  இந்த ஆலோசனையின்போது, கொரோனா மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வரும் 29ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம்  ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தமிழகத்தில் வருகின்ற மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும்  நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடனான சந்திப்புக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.