கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு பகுதியில் முழு முடக்கம்

சென்னை:

ல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு முதல் அடுத்த 10 நாட்களுக்கு முழு முடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. எனினும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.


இந்த நிலையில், சென்னையை அடுத்துள்ள கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு முதல் அடுத்த 10 நாட்களுக்கு முழு முடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அணுமின் நிலைய ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்கள் உட்பட 15 பேருக்கு கொரோனா உறுதியானதால் அப்பகுதியில் முழு முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.