மேற்கு வங்கத்தில் கடைபிடிக்கப்படும் முழு ஊரடங்கு எதிரொலி: சாலைகள் ‘வெறிச்’

--

கொல்கத்தா: கொரோனா காரணமாக மேற்கு வங்கத்தில் கடைபிடிக்கப்படும் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

மேற்கு வங்கத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வாரத்தில் 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, வியாழன், சனிக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

சனிக்கிழமையான இன்று மேற்கு வங்கம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆகையால் வாகன போக்குவரத்து எதுவும் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

அத்யாவசிய தேவைகளை தவிர பிற காரணங்களால் வெளியே வந்தவர்களை போலீசார் எங்கும் செல்ல அனுமதிக்கவில்லை.  மேற்கு வங்கத்தில் அடுத்த ஊரடங்கு வரும் 29ம் தேதி கடைபிடிக்கப்பட உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, மேற்கு வங்கத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  5,3973 ஆக உள்ளது, குறிப்பிடத்தக்கது.