பெங்களூரு: கர்நாடகாவில் தேவைப்பட்டால் பொதுமுடக்கம் கட்டாயம் விதிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மக்கள் தங்கள் நலனுக்காக விதிகளை பின்பற்ற வேண்டும். கேட்காவிட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கும். தேவைப்பட்டால் பொதுமுடக்கம் கட்டாயம் விதிக்கப்படும்.

அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக  மாவட்டத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்துதல், சமூக இடைவெளி ஆகியவற்றை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பொதுமுடக்கம் அறிவிக்க அரசு தயாராக இல்லை. மக்கள் ஒத்துழைத்தால் கொரோனா 2வது அலையிலிருந்து கட்டாயம் மீளலாம் என்று கூறினார்.