‘எப்படி இருந்த நான்… இப்படி ஆகிட்டேன்…’ வெறிச்சோடிய மும்பை… புகைப்படங்கள்

மும்பை:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மக்கள் நெருக்கம் மிகுந்த மும்பையின் பிரதான பகுதிகள் தற்போது வெளிச்சோடி, ஆள் அரவமின்றி காணப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் மக்கள் நெருக்க பகுதிகளில் முதன்மையானது மும்பை மாநகரம். மகாராஷ்டிரா மாநிலத்தின் பிரதான நகரமான மும்பையில்  1.27 கோடி மக்கள் வசிக்கிறார்கள். அதாவது ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 26,453 பேர் வசிக்கிறார்கள் என்று மும்பை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள மும்பையின் பிரதான பகுதிகள் தற்போது, மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்தியாவில்  கொரோனா தொற்று பரவலில் முதலிடத்தில் உள்ளது மகாராஷ்டிரா மாநிலம். இதற்கு ஒரு காரணம் அங்குள்ள மக்கள் நெருக்கம். இருந்தாலும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. மக்கள் வெளியில் நாடுமாடுவதை தவிர்க்க வேண்டுகோள் விடுத்துள்ளன. ஊரடங்கை கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, மும்பையின் பிரதான பகுதியான கேட்வே ஆஃப் இந்தியா, மக்கள் நடமாட்டம் இல்லாததால், அங்குள்ள புறாக்கள் உணவுக்காக பரிதாபமாக காத்திருக்கும் காட்சிகளும் மனதை நெருடுகின்றன.

Photo Credit: Hindustan Times

This slideshow requires JavaScript.