ஆன்-ஆஃப் சுவிட் அல்ல; முதலாளி மனப்பான்மையில் மோடிஅரசு நடந்து கொள்ளக்கூடாது… ராகுல்காந்தி விளாசல்…

டெல்லி:

ரடங்கு விவகாரத்தில் முதலாளி மனப்பான்மையில் மோடி நடந்துகொள்ளக்கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி அறிவுறுத்தினார்.

இன்று காணொளி காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, மத்திய பாஜக அரசுமீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி, சரமாரியாக கேள்விக்கணைகளை வீசினார்.

பொது முடக்கம்  ஆன் ஆஃப் சுவிட்ச் இல்லை

முடிவெடுக்கும் அதிகாரம் மாநிலஅரசுகளுக்கு வழங்கப்பட வேண்டும்

குடும்பங்களுக்கு ரூ.7,500 நிவாரண நிதி வழங்க வேண்டும்

நிவாரணத் தொகை ஏழைகளின் கைகளில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்

மக்களிடம் உள்ள கொரோனா அச்சத்தைப் போக்கி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்

இந்தியாவில் தமிழகம் உள்பட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், கொரோனா ஊரடங்கில் பல தளர்வுகளும் அறிவிக்கட்பபட்டுஉள்ளது. முன்னதாக கொரோனா தடுப்பு பணிகள், நிவாரணப் பணிகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டன. இதில் ஏராளமான புகார்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், இன்று காணொளி காட்சி மூலம் காங்கிரஸ் இளந் தலைவர் ராகுல்காந்தி ராகுல் காந்தி எம்.பி. காணொளிக் காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது கூறியதாவது,

“கொரோனா ஊரடங்கு விவகாரத்தில் அரசாங்கதின் நடவடிக்கைகளில் சிறிது வெளிப்படைத் தன்மையை கொடுக்க வேண்டும். அப்படியிருந்தால்தான், ​​அதற்கான அளவுகோல்கள் என்ன, ஊரைடங்கை முற்றிலும் தளர்த்துவதற்கு முன்பு அவர்கள் விரும்புபவைகள் எவை என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும் என்றார்.

“ஊரடங்கை ஒரு முக்கியமல்ல, நீங்கள் அதை விலக்கினால் அது போய்விடும். இது நடக்க பல விஷயங்கள் தேவை. இதற்கு உளவியல் மாற்றம் தேவை. இது ஆன்-ஆஃப் சுவிட்ச் அல்ல என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும், ”என்று அவர் மேலும் கூறினார்.

“கொரோனா வைரஸ் தொற்று நாட்டிலுள்ள முதியோருக்கும், நோயாளிகளுக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதில் மக்கள் வெளியே, அவர்கள்  மனதில் உளவியல் ரீதியான மாற்றத்தைக் கொண்டுவருவது அவசியம்.   ஊரடங்கைத் தளர்த்த விரும்பினால், மக்களிடம் உள்ள அச்சத்தைப் போக்கி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

கொரோனா ஊரடங்கு குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை மாவட்ட அளவில் பிரித்து வழங்கினால்தான் கொரோனாவை வெல்ல முடியும் என்று கூறிய ராகுல், அதிகாரத்தை பிரதமர் அலுவலகமே வைத்திருந்தால், கொரோனாவுக்கு எதிரான போரில் தோற்றுவிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தார்.

தற்போதுள்ள  நிலையில் கொரோனா பரவல் தன்மைக்கேற்க பச்சை, ஆரஞ்சு, சிவப்பு  என மண்டலங்களாக  மத்திய அரசு முடிவு செய்கிறது.  இவற்றை மாநில அரசுகளின் வசம் விட்டு விடுங்கள் என்று வலியுறுத்தினார்.

மேலும், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு மாநில அரசுகளுக்குப் போதுமான நிதியை வழங்குவது அவசியம் என்று வலியுறுத்தியவர்,  சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு நிதி வழங்குதல், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிகள் போன்றவற்றை போன்றவற்றைச் செய்து, ஊரடங்கைத் தளர்த்த வேண்டும், குறைந்த பட்சம் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா  ரூ.7,500 நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றார்.

ஊரடங்கைத் தளர்த்தும் நெறிமுறைகளில் மத்திய அரசு வெளிப்படைத்தன்மையுடன் நடக்க வேண்டும் என்று வலியுறுத்திய ராகுல், இதை  மத்திய அரசு ஆன் ஆஃப் சுவிட்ச் போல நினைக்காமல், தங்கள் திட்டத்தை வெளிப்படையாகக் கூற வேண்டும்,

அரசு தனது நடவடிக்கைகளில் கொஞ்சமாவது வெளிப்படைத் தன்மை கொண்டிருக்க வேண்டும். மக்கள் அனைவரும் எந்தெந்த துறைகள், எந்தெந்த சேவைகள் இயங்கும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது, ஊரடங்கு விவகாரத்தில் முதலாளி மனப்பான்மையில் மோடி நடந்துகொள்ளக்கூடாது.

இது விமர்சிப்பதற்கான நேரம் அல்ல என்பதும், எங்களுக்குத் தெரியும். ஆனால், இப்போதுள்ள இக்கட்டான சூழலிலிருந்து நாம் வெளியேற வேண்டியது அவசியம் என காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டையும்  தெளிவுபடுத்தினார்.

புலம்பெயர்ந்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்று கூறியவர்,  கொரோனா நோய் தொற்று வயதானவர்கள், சர்க்கரை நோய் பிரச்னை கொண்டவர்கள் மற்றும் உயர் ரத்த அழுத்த நோயாளிகள் உள்ளிட்டவர்களைப் பெரிதும் பாதிக்கிறது, மற்றவர்களுக்கு இந்தத் தொற்றால் பெரும் பாதிப்பு இல்லை. எனவே மக்களது மனநிலையை நாம் மாற்றமடையச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்,  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர்  “சோனியாஜி கூறியது போல், பூட்டுதல் 3.0 க்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சோனியாஜி ஏற்கனவே இதை  சுட்டிக்காட்டியுள்ளார். நாடு  ஊரடங்கில் இருந்து வெளியே  இந்திய அரசாங்கத்தின் உத்தி என்ன என்று மாநில முதல்வர்கள் கேட்க வேண்டுமென்று வலியுறுத்தினார். ”