லாக்டவுன்: சென்னையில் 200 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படும் என அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்பபடுத்த இன்று முதல் இரவு நேர லாக்டவுன் அமலுக்கு வருவதால், சென்னையில் 200 இடங்களில் வாகன சோதனை நடத்த திட்டமிட்டு உள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக  தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிறன்று  முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரவு லாக்டவுன் இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.  இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை லாக்டவுன் அமலில் உள்ளது.

இதையடுத்து,    இரவில் யாரும் வாகனத்தில் செல்ல கூடாது என்று கால்துறை அறிவுறுத்தி உள்ளது. மீறி வாகனத்தில் செல்பவர்களை கண்காணிப்பதற்காக சென்னையில் 200 இடங்களில் வாகன சோதனை மையம் தயாராக இருப்பதாகவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு இரவில் வாகனங்களில் வருவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது

ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு என்பதால் அன்றைய நாளில் பகலில் கூட வாகனங்கள் செல்ல கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஊரடங்கின் மருத்துவ காரணங்களுக்காக செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி உண்டு என்றும் ஆனால் அதே நேரத்தில் தகுந்த சான்றுகள் அளிக்க வேண்டும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது