காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட விதத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

‘’ஊரடங்கை அமல் படுத்தியது, கொரோனாவுக்கு எதிரான தாக்குதல் அல்ல’’ என குறிப்பிட்டுள்ள அவர்’’ ஏழைகள் மீதும், நமது இளம் தலைமுறை மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல் தான், ஊரடங்கு ‘’ என்று தெரிவித்துள்ளார்.

’’ஊரடங்கு, அமைப்பு சாரா துறையினருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை என்பது நிரூபணம் ஆகியுள்ளது’’ என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

‘சிறு மற்றும் நடுத்தர தொழில்களை பாதுகாப்பதற்கு பதிலாக , வெறும் 15 அல்லது 20 பணக்காரர்கள் செலுத்த வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் வரிகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது’’ என்று ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.

-பா.பாரதி.