சென்னை:

ரடங்கு  காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள திருநங்கைகளுக்கும் (மூன்றாம் பாலினித்தவர்) இலவச நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ள தமிழகஅரசு, தற்போது, ரேசன் கார்டு இல்லாத திருநங்கைகளுக்கும் இலவச அரிசி வழங்க உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய மாநில அரசுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

தமிழகஅரசு சார்பில், கார்டுதாரர்களுக்கு ரூ.1000 உடன் இலவச அரிசி, பருப்பு, பாமாயில் போன்றவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், ரேஷன் கார்டு இல்லாத திருநங்ககைகள் தங்களுக்கும் அரசு உதவவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். அதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு,

ரேஷன் கார்டுகள் இல்லாத மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 4,022 உறுப்பினர்களுக்கு 12 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு வகைகள் மற்றும் 1 லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவற்றை இலவசமாக வழங்க உத்தரவிட்டு உள்ளது.