சென்னை:
மிழகத்தில் கொரோனா ஊரடங்கு ஜூலை 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில்  விதிகளை மீறி வாகனங்களை செல்வோரை காவல்துறையினர் மடக்கி வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலித்து வருகின்றனர்.
அந்த வகையில் இதுவரை அபராதம் வசூல் மட்டும் ரூ. 17.30 கோடி என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்து உள்ளது.
கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் 6/07/2020 மாலை வரை ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதம் ரூ.17.30 கோடியாக உயர்ந்துள்ளதாக என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறிய 6,23,088 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 8,17,968 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும்,  இதுவரை 7,46,436 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.