Random image

வைபவ், வாணி போஜன் த்ரில்லர் படம் ‘லாக்கப்’ நாளை ரிலீஸ்..

டிகர் நித்தின் சத்யா தயாரிக்கும் இரண் டாவது படமான ‘லாக்கப்’ படம் பார்வை யாளர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வரும் சிறந்த திரில்லர் படமாக உருவாகி யுள்ளது. பல வகையான சிறந்த படைப்பு களை தொடர்ச்சியாக பார்வையாளர் களுக்கு வழங்கி வரும் மிகப்பெரிய நிறுவனமான ZEE5 இப்படத்தை வெளி யிடுகின்றது.


படத்தின் டீஸர் மற்றும் டிரைலர் வெளி யானது முதலே எதிர்ப்பார்ப்பை கூட்டி யுள்ள “லாக்கப்” படம் நாளை (ஆகஸ்ட் 14 ) ZEE5 OTT தளத்தில் வெளியாகவுள்ளது.
திரையரங்குகள் கொரோனா ஊரடக்கால் மூடியிருக்கும் நிலையில் இப்படம் ஒடிடியில் வெளியாகிறது. இப்படத்தில் மிகவும் வித்தியாசமான கதாபாத் திரத்தில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு நடித் துள்ளார். முதன்மை கதாபாத்திரங் களில் நடிகர் வைபவ் மற்றும் வாணி போஜன் நடித்துள்ளனர். மேலும் முக்கிய கதாபாத் திரங்களில் பூர்ணா, ஈஸ்வரி ராவ், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
அறிமுக இயக்குனரான எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியுள்ள இப்படத்தை நித்தின் சத்யாவின் ஸ்வேத் – எ நித்தின்சத்யா புரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரிப்பு நிறு வனம் தயாரித்துள்ளது. அரோல் கொரேலி இசையமைத்துள்ளார். சந்தானம் சேகர் ஒளிப்பதிவை செய்திருக்கிறார். ஆனந்த் ஜெரால்ட் எடிட்டிங் செய்துள் ளார். இப்படத்தில் ஆனந்த மணி கலை இயக்கு நராக பணிபுரிந்துள்ளார்.