நீலகிரியில் பரவும் கொரோனா: டெல்லி நபரை தங்க வைத்த லாட்ஜ் மூடல்

உதகை: நீலகிரி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதியாக, விதிகளை மீறி சுற்றுலா பயணிகளை தங்க வைத்த லாட்ஜூக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் 29 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக பொது மக்கள் மத்தியில் ஒரு வித அச்சம் காணப்படுகிறது.

இதனையடுத்து, ஆட்சியர் உத்தரவுப்படி போலீசார், வருவாய், நகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் உதகை நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள லாட்ஜ்கள், ஓட்டல்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அதில் லாட்ஜ் ஒன்றில் விதிமீறி தங்கிய டெல்லி நபரை அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அந்த குறிப்பிட்ட லாட்ஜ்க்கு சீல் வைக்கப்பட்டது. மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கண்காணிப்பு மற்றும் ஆய்வுப்பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.