2.o படத்தில் லாஜிக்: மோதிக்கொள்ளும் இரு பிரபல எழுத்தாளர்கள்

ணக்கம் மக்கா..  பேசி ரொம்ப நாளாச்சு. உலகத்துக்கு ஏதாவது கருத்து சொல்லியே ஆகணுமேன்னு நினைச்சுக்கிட்டே பேஸ்புக் மேய்ஞ்சிக்கிட்டிருந்தேன். பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் பதிவு கண்ணுல பட்டுச்சு.  2.o படத்தைப் பத்தி பிரபல அமானுஷ்ய எழுத்தாளர் இந்திரா சவுந்திரராஜன் கடுமையா விமர்ச்சி எழுதியிருக்கிறதா  எழுதியிருந்த பி.கே.பி. அதுக்கெல்லாம் பதிலும் சொல்லியிருந்தாரு.

முதல்ல இந்திரா சௌந்திரராஜனோட கருத்து:

“2.0 படம் குறித்து என் இனிய நண்பரும் எழுத்தாளருமான இந்திரா செளந்தரராஜன் அவர்களின் பதிவு இது.

எப்படி இப்படி நடந்தது என்று ஆச்சரியமாக இருக்கிறது
சங்கரா இப்படி சறுக்கியது என்று அதிர்ச்சியாகவும் உள்ளது. ஆவி பக்கமெல்லாம் போகாத ஒரு இடது சார்பாளர் எப்படி ஒரு சமூக அக்கரையாளனை தற்கொலை செய்ய வைத்து ஆவியாக்கினார் என்பதை இப்போது கூட நம்ப முடியவில்லை. எதிர்த்து போராடி எதிரிகளை அழிக்க துப்பில்லாதவன் ஆவியாகி பழி வாங்குகிறான் என்பதே அபத்தம். போய்த் தொலைகிறது..

இவன் பப்ளிக் போன்களை அபகரிப்பதற்கு எல்லா டவர்களையும் அழித்தோ | இல்லை அதன் மூலத்தை (இன்சாட் ) அழித்தால் போதுமே? ஒழிந்து போகிறது.

உலகம் முழுக்க இப்போது செல்போன் தான் எல்லாம்.

இந்த ஆவி சென்னையை தாண்ட மறுக்கிறதே? மற்ற நாடு நகரங்களில் பறவைகள் சாகலாமா ? இங்கேயும் ஒழிந்து போகட்டும் முதலில் சென்னை பிறகு உலகை அது திருத்தப் போவதாய் வைத்துக் கொள்வோம் |

ஆவியும் ஒரு அலைவரிசை – அது ஒரு விஞ்ஞானம் என்று கூறுகிறாரா சங்கர்? அதை ஒரு அழகிய அல்லது புதிய சிந்தனை என்றே வைத்துக் கொள்வோம்.

இந்திரா சௌந்திரராஜன்

செல்போன் டவர்களால் பறவை இனம் அழிவது நிருபிக்கபட்டுள்ளதா?

கேள்விகள் கேள்விகள் கேள்விகள்
சங்கரா இப்படி? இன்னமும் என்னால் நம்ப முடியவில்லை!” இப்படி சொல்லியிருக்காரு இந்திரா சௌந்திரராஜன்.

அதுக்கு பட்டுக்கோட்டை பிரபாகர் கொடுத்திருக்கிற பதில்:

“வணக்கம் இந்திராஜி.

2.0 படத்தில் நீங்கள் எழுப்பியிருக்கும் சில கேள்விகளுக்கு இந்த பதில்கள் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள்.

ஆவிக்குப் பதிலாக விஞ்ஞானப் பூர்வமான ஆரா விளக்கத்துடன் மனித ஆராவும், புறாக்களின் ஆராவும் இணைந்த ஒரு நெகட்டிவ் ஃபோர்ஸ் உருவாக்கியிருப்பதை ஒரு ஃபான்டசியாக பார்த்தால் பிரச்சினையில்லை.

சமூகப்போராளிகள் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள் என்று எப்படி சொல்ல முடியும்? பல ஐ.ஏ.எஸ். மாணவர்களை உருவாக்கி உற்சாகப்படுத்திய தன்னம்பிக்கை இளைஞர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டாரே. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் தனக்கு நேர்ந்த அவமானங்களின்போது பலமுறை தற்கொலை எண்ணம் ஏற்பட்டதாக தன் புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதை நீங்களும் படித்திருக்கலாம். விடுதலைப் புலிகளில் 23 வயது திலீபன் உண்ணாவிரதம் இருந்து தற்கொலை செய்துகொண்ட வரலாறு நீங்களும் மறந்திருக்க மாட்டீர்கள்.

பி.கே.பி. பதிவு

தமிழ் நாட்டின் எல்லையில் மட்டும்தான் இது நிகழுமா என்று கேட்டிருக்கிறீர்கள். இப்படி ஒரு எல்லை வரையறுத்துதான் கதை செய்ய முடியும். ஹாலிவுட் படங்கள் அனைத்திலும் வேற்று கிரக வாசிகள் அமெரிக்காவை அழிப்பதைத்தான் நோக்கமாக கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏன் ஆஸ்திரேலியாவை அழிக்கக்கூடாது என்று கேட்டால் எப்படி? தமிழ்ப் படம் என்பதால் தமிழ்நாட்டின் எல்லைக்குள் நடப்பதாகக் கதை சொல்லப் பட்டிருக்கிறது.

பட்டுக்கோட்டை பிரபாகர்

செல்போன் டவர்களின் கதிர் வீச்சுகளால் பறவைகள் பாதிக்கப்படுவதற்கான விஞ்ஞான குறிப்புகள் நிறைய உள்ளன. கூகுள் செய்து பாருங்கள். தெரியும்.சாம்பிளுக்கு ஒரு லிங்க் இத்துடன்.

https://www.livescience.com/19908-migratory-birds-killed-to…

ரஜினி காருடன் உரையாடும் படங்களையும், ஒரு கதாநாயகன் நூறு பேரை ஆயுதம் இல்லாமல் துவம்சம் செய்யும் ஆயிரம் படங்களையும் பார்த்து கடந்து வந்துவிட்டு ஒரு ஃபேன்டசி கதையில் நூறு சதவிகிதம் லாஜிக்குகளைத் தேடுவதும் சரியா என்று புரியவில்லை.” – இதான் பி.கே.பி. பதிவு.

பின்குறிப்பு: எழுத்தாளர்கள் மோதல்னு தலைப்பு.. கொஞ்சம் ஓவராத்தான் இருக்கோ?

டைரக்டரு ஷங்கர் இடதுசாரினு நினைச்சுக்கிட்டிருக்காரு இந்திரா சவுந்திர்ராஜன்!   ஐ.ஏ.எஸ். அகடமி நடத்திய சங்கரோட தற்கொலையை விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த திலீபன் தற்கொலையோட சேர்க்கிறாரு பட்டுக்கோட்டை பிரபாகர்!

இதையெல்லாம்விடவா, இந்த தலைப்பு தப்பாயிரப்போவுது?

சரி போகட்டும்… இ.ச.,   “பப்ளிக் போன்களை அபகரிப்பதற்கு எல்லா டவர்களையும் அழித்தோ | இல்லை அதன் மூலத்தை (இன்சாட் ) அழித்தால் போதுமே”னு லாஜிக்கா கேட்டிருக்காரு. அதுக்கு மட்டும் பி.கே.பி. பதில் சொல்லலை.

ஆனா 3.o படத்துக்கு நல்ல நாட் கொடுத்திருக்கார் இ.ச. சாட்டிலைட்டுகளை ஒழிக்க ஒரு பேய் திட்டமிடுது.. அதை சிட்டி தடுக்கிறாரு!

இது எப்புடி இருக்கு?

( ஆக கதைத்திருட்டு புகார் 3.o-வுக்கும் வரும்போல!

 

#roundsboy # Logic #2.0 #film #2 #famous #writers #fighting  #indrasoundarrajan #pattukottaiprabahar