சென்னை:

லோக்சபா தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனு வாங்கப்பட்ட நிலையில், விரும்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர் காணல் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று  நடைபெற்று வருகிறது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர்  இ.பி.எஸ் உள்பட தேர்வு குழுவினர் நேர்காணலை நடத்தி வருகின்றனர்.

மக்களவை தேர்தலில், தமிழகத்தில்  அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பவர்கள் மனு தாக்கல் செய்யலாம் என்று கடந்த மாதம் அதிமுக தலைமை அறிவித்தது. அதைத் தொடர்ந்து, ஓபிஎஸ் மகன் உள்பட முன்னாள் அமைச்சர்கள் பலரின் ரத்த சம்பந்தங்கள்  உள்பட ஏராளமான பர் சீட் கேட்டு விருப்பமனு அளித்தனர்.  மொத்தம் 1736 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

அவர்களிடம்   சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்றும், நாளையும்  நேர்காணல் நடைபெறுகிறது.

அதன்படி இன்றைய தினம்,  சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, விழுப்புரம், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துகுடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி, ஆகிய 20 தொகுதிகளுக்கு இன்று நேர்காணல் நடத்தப்படுகிறது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் நிர்வாகிகள் பா.வளர்மதி, தமிழ்மகன் உசேன், வேணுகோபால் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேர்காணல் நடத்தி வருகின்றனர்.