சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில் போட்யிட விருப்பமுள்ளவர்கள், விருப்ப மனு வாங்கிக்கொள்ளலாம் என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி வேட்புமனு  பெற்ற வர்களுக்கான வேட்பாளர் நேர் காணல் இன்று கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

ஏப்ரல் 18ந்தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அரசியல் கட்சிகள் கூட்டணிகளை அமைத்து களமிறங்க தயாராக உள்ளது. ஆனால், மக்கள் நீதி மய்யம் இதுவரை எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல், தனித்து போட்டியிடவும் தயார் என்று அறிவித்து உள்ளது.

மக்களவைத் தேர்தலில் போட்டியிட  மக்கள் நீதி மய்யம் சார்பில் 1137 பேர் விருப்ப மனுக்கள் கொடுத்திருந்தனர். அவர்களுக்கு  சென்னை  ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் நேர் காணல்  தொடங்கியுள்ளது.

முதல் கட்டமாக 12 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்த 105 பேர் நேர் காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். வரும் 15ஆம் தேதி வரை இந்த நேர்காணல் நடைபெறுகிறது.